Skip to main content

Posts

Showing posts from August, 2019

ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*.

*ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*. உற்சாகமில்லாமலிருந்தாலும் ஜெபி ஊக்கமில்லாவிட்டாலும் ஜெபி. பதில் வந்தாலும் ஜெபி பதில் வராவிட்டாலும் ஜெபி. நல்லாருந்தாலும் ஜெபி நல்லாயில்லாவிட்டாலும் ஜெபி. குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி ஜெபித்துக் கொண்டேயிரு. ஏனென்றால் ஜெபம்தான் உன் வாழ்க்கையை மாற்றும் உன்னத வழி. ஜெபம்தான் தேவனோடு பேச ஒரே வழி. ஜெபிக்க பழகாதவரை நீ ஒரு சாதாரண கிறிஸ்தவன். *ஜெபிக்க பழகிவிட்டால் நீ ஒரு சாதனை கிறிஸ்தவன்.*

கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன்?*

*தலித் இந்துக்களே கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன்?* ஒருமுறை ஒரு இந்து சகோதரன், "சார், இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்வதால் அவரை நாங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறீர்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம். தாராளமாக உங்கள் கடவுளையும் எங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அதேபோல, மேல்மருவத்தூரில் இருக்கும் ஆதிபராசக்தியும் அற்புதம் செய்வதால் எங்கள் கடவுளையும் உங்கள் கடவுளாக வணங்கமுடியுமா சார்? நாலுமாவடிக்கு மக்கள் கூட்டமாக விடுதலையை தேடி வருவதுபோல எங்கள் கோயில்களுக்கும் கூட்டமாக மக்கள் விடுதலையைத்தேடி வருகிறார்களே சார்" என்று சாந்தமாக கேட்டார். இந்த கேள்வி என்னை மிகவும் சிந்திக்கவைத்தது. வெறுமனே அற்புதங்களை செய்துகாட்டி மதமாற்றம் செய்ய மட்டும்தான் இயேசு வந்தாரா? அப்படியானால் அற்புதங்கள் செய்யும் வலிமை உடைய எதையும் கடவுள் என்று ஏற்றுக்கொள்ளலாமா? "இறைவன் ஒருவனே" என்ற கொள்கையை கிறிஸ்தவர்களாகிய நாம் கற்றிருக்கிறோமே! கடவுள் அல்லாத சக்திகளாலும் அற்புதங்களை செய்யமுடியுமானால் உண்மையான கடவுளை அடையாளம் காண்பது எப்படி? என்றெல்லாம் அன்றே நான் தேட ஆரம்பித்துவிட்டேன். மறை...

ஸ்காட்லாந்து தேசத்தை சேர்ந்த ஜாண் நாக்ஸ் என்ற பக்தன் முழங்காலிலே நின்று தன் தேசத்திற்காக மன்றாடி ஜெபிக்கிற ஜெப வீரன் !!!!

*ஜெப வீரன்* 💠   ஸ்காட்லாந்து தேசத்தை சேர்ந்த ஜாண்  நாக்ஸ்   என்ற பக்தன் முழங்காலிலே  நின்று தன் தேசத்திற்காக மன்றாடி ஜெபிக்கிற ஜெப வீரன் !!!! 💠   ஸ்காட்லாந்து தேசத்தை எனக்குத் தாரும்!!இல்லாவிட்டால் நான் மடிந்து போகட்டும் என கதறி ஜெபிக்கிற ஒரு ஜெப வீரன் அவர்! !! 💠  அந்த தேசத்தை அரசாண்ட பொல்லாத ராணியாகிய இரத்தவெறி பிடித்த அரசியாகிய மேரி சொன்னாள்!! " நான் உலகத்துக்கு எவருக்கு பயப்படாமல் இருந்தாலும், முழங்காலில் நிற்கிற ஜாண் நாக்ஸிற்க்கு பயப்படுகிறேன்!!! 💠   அவன் முழங்கால்படியிட்டால் போதும், என் உடல் தீ  பற்றி எரிகிற அளவுக்கு வேதனை உண்டாகிறது! !என்றாளாம்!!! 💠  முழங்கால் படியிட்டு ஜெபிக்கிற  தேவ பிள்ளைகளுக்கு அசாதாரண வல்லமை உண்டு!! 💠   முழங்கால் படியிட்டு தேவனை பார்க்கிறவன் எந்த மனிதனிடமும்  மண்டியிட அவசியம் வராது!!! 💠  ஜெபிக்கிறவனைக் கண்டால் சாத்தான் மட்டுமல்ல!! அரசாங்கமே நடுங்கி திகைக்கும் என்பதில் ஐயமில்லை!! 💠  ஜெபிக்கிற மோசேவைக் கண்டு பார்வோன் ராஜா நடுங்கினான்!!! 💠...

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது

நீ எத்தனை லட்சத்துக்கு  குடில் அமைத்தாலும், நீ எவ்வளவு உயரமான கிருஸ்துமஸ் மரம் வைத்தாலும், எத்தனை ஸ்டார் கட்டினாலும், வீடுமுழுவதும் சீரியல் பல்ப் போட்டாலும், எத்தனை கலரில் வீட்டுக்கு சுண்ணாம்பு அடித்தாலும், எத்தனை கோடி செலவுசெய்து அலங்கரித்தாலும், நீ மகிழலாம், உன் குழந்தைகள் மகிழலாம், உன் உறவினர்கள் மகிழலாம். ஆனால் இயேசு மகிழ்வாரா...!!! பொம்மையையும், வீட்டையும் நீ அழகுபடுத்துவதற்காக அவர் பிறக்கவில்லை உன்னை அலங்கரிப்பதற்காகவே பிறந்தார் உன் உள்ளத்தை பரிசுத்தம் என்கிற அலங்காரத்திலே அலங்கரிப்பாயானால் கண்டிப்பாக உன்னுடைய உள்ளத்திலே பிறப்பார். உன் அலங்காரத்தை அல்ல உன்னுடைய பரிசுத்தத்தையே தேவன் விரும்புகிறார்.  *அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது* 1 பேதுரு 3:4

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்!

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்! "Time and tide wait for no man" "அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத் தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்" (ஆதி. 19:16).  "நாட்களை எண்ணும் அறிவு" உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் காலங்களை வீணாக்கமாட்டீர்கள். தாமதித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள். செய்ய விரும்பிய காரியங்களை, குறிப்பிட்ட நேரத்திலே துரிதமாக செய்து முடிப்பீர்கள். சோதோம் கொமோரா பட்டணம், அழிவுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது, என்று அறியாத லோத்தின் குடும்பத்தினர் தாமதித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த தேவதூதன், அவர்களது கையை பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து, விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  சோதோம் கொமோராவின் பாவம், வானபரியந்தம் எட்டியது. அதனுடைய கூக்குரல் பெரிதாயிருந்தது. ஆகவே, கர்த்தர் அந்தப் பட்டணத்தை முற்றிலுமாக அ...

அன்றன்றுள்ள அப்பம் விசேஷ அறிவு!

அன்றன்றுள்ள அப்பம் விசேஷ அறிவு! "எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்" (சங். 90:12). இது ஒரு சிறு ஜெபம்தான். அபூர்வமான ஜெபம். சிந்திக்க வைக்கும் வித்தியாசமான ஜெபம். "பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்று ஆயக்காரன் ஜெபித்த ஜெபம், அவனையும் நீதிமானாக்கிற்று. என் எல்லைகளை விரிவாக்க வேண்டும் என்று யாபேஸ் செய்த சிறு ஜெபம், அவர் வேண்டிக்கொண்டதை கர்த்தரிடத்தில் பெற்றுத் தந்தது. வானத்திலிருந்து அக்கினி இறங்கும்படியாக எலியா ஜெபித்த சிறு ஜெபம், கர்மேல் பர்வதத்திலே மிகப் பெரிய எழுப்புதலை உண்டாக்கிற்று. கண்கள் பிடுங்கப்பட்ட நிலைமையிலே, சிம்சோன் ஜெபித்த ஜெபம், இழந்துபோன பெலனை திரும்பக் கொண்டு வந்தது. அதேநேரம், "எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தரு ளும்" என்று உள்ளமுருகி ஜெபித்தார் மோசே பக்தன். அவருடைய இந்த ஜெபம் 90-ம் சங்கீதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியானால், அந்த ஜெபம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்! அவர் ஒரு தேவ மனுஷன். வேதத்தில் ஏழுபேர் தேவனுடைய மனுஷர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 1. மோசே (...

ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்

“ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (மத்தேயு 10:31) மனிதர்களிடம் பயம் என்பது பொதுவாக காணப்படுகிறது. ஒவ்வொரு நபரும் ஒருவகையான பயத்தில் சிக்கி கொண்டுள்ளனர். முக்கியமாக, நம் அனைவருக்கும் எதிர்காலத்தை குறித்தான பயம் அதிகம் உண்டு. நம் குடும்பம், வேலை, சமூதாயம் என்று நினைக்கும் போது, அது நமக்குள் பயத்தையும் பதட்டத்தையும் உருவாக்குகிறது.  ஆனால், ‘பயப்படாதிருங்கள்’ என்று இயேசு கூறுகிறார். ஏனெனில், நம்மை அழைத்த பிதா ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை! மேலும், நாம் சுவிசேஷத்தினிமித்தம் பயப்படக்கூடாது. கிறிஸ்தவ சரித்திரத்தில், அநேக விசுவாசிகள் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பதை காண முடிகிறது. ஆனால், சரீரத்தை மட்டும் கொல்லுகிறவர்களுக்கு பயப்பட வேண்டாம் என்று இயேசு கூறுகிறார். ஏனெனில், நம் மாம்ச சரீரம் அழிந்தாலும், நாம் உண்மையுள்ளவர்களாய் இருந்தால், மகிமையின் சரீரத்தில் பிதா நம்மை உயிர்த்தெழச் செய்வார் அல்லவா. எனவே, நம் எதிர்காலத்தை குறித்தும், சுவிசேஷத்தினிமித்தமும் நாம் பயப்பட வேண்ட...

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்

​​​இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் இந்த பாடல் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இப்பாடல் ஒரு இரத்தசாட்சி தன் மரண தருவாயில் இயற்றிய பாடல் ஆகும். எத்தகைய பாடுகளும் கிறிஸ்துவின் அன்பை விட்டு தன்னை பிரிக்க முடியாது என்ற தைரியத்துடன் விசுவாசத்துக்காக வாழ்ந்து மரித்த ஒருவரின் கதை இது. சுமார் 150 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து ஜெர்மனி போன்ற தேசங்களிலிருந்து இந்தியாவிற்கு நற்செய்திப் பணிக்காக பலர் வந்தனர். அவர்களில் வெல்ஷ் தேச மிஷனெரி ஒருவர் வடகிழக்கு இந்தியாவில் ஒரு கிராமத்தில் இரு பிள்ளைகளடங்கிய ஒரு சிறிய குடும்பத்தை ஆண்டவருகாக ஆதாயப்படுத்தினார். கிறிஸ்தவராக மாறிய அந்த மனிதனின் விசுவாசம் அந்த கிராமத்திலுள்ள மற்றவர்களையுயும் அசைத்தது. இதனால் கோபமடைந்த அந்த கிராமத்தலைவர் எந்த கிராமத்திலுள்ளவர்கள் எல்லாரையும், அந்தக் கிறிஸ்தக் குடும்பத்தையும் கூட்டி * நீங்கள் எல்லாருக்கும் முன்பாக உங்கள் விசுவாசத்தை விட்டு விலகுங்கள்- இல்லையெனில் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் * என் எச்சரித்தான். அச்சமயத்தில் பரிசுத்த ஆவியால் தூண்டப...

ஆராதனை

*ஆராதனை →* சில மாதங்களுக்கு முன்பு எனது வேலையின் நிமித்தம் ஞாயிறு அன்று வேறு ஒரு சபைக்கு சென்றேன். ஆராதனையை பாஸ்டர் அம்மா நடத்தினார்கள். அவர்கள் கூறினார்கள் பாடலாம் ஆடலாம். பாடல் பாடபட்டது, (ஆடும்படியான பாடல்) எல்லோரும் ஆட ஆரம்பித்தது விட்டார்கள். சகோதரிகள் பக்கம் பார்த்தேன் அவர்களும் ஆட ஆரம்பித்தது விட்டார்கள். ஒரு குண்டு சகோதரி தனது கனமான உடலை வைத்து ஆட முடியாமல் ஆடி கொண்டு இருந்தார்கள். ஏண்டா இந்த சபைக்கு வந்தோம் என்று நினைத்தேன். காலத்தின் கடைசி நாட்களில் இவ்விதமாய் குதித்து ஆடிப்பாடி ஆராதிக்கும் விசுவாசிகளின் எண்ணிக்கைக்கு பஞ்சம் கிடையாது. ஆராதனை இன்றைய நாட்களில் சபைகளில் திசை கெட்டு போய் கொண்டு இருக்கிறது. அவர்கள் இடம் கேட்டால் தாவீது ராஜா நடனம் பண்ணினார். ஆகையால் நாங்களும் நடனம் பண்ணுகின்றோம் என்று கூறுகின்றனர். நீங்கள் நடனம் பண்ண விரும்பினால் ஒர் அறைக்குள் பிரவேசித்து கதவை பூட்டி பாட்டு பாடி நடனம் ஆடுங்கள்.  சில வருடங்களுக்கு முன்பு கோவையில் திறந்த வெளி மைதானத்தில் நற்செய்தி கூட்டம் ஒன்று நடைபெற்றது. அடியேன் ஒரு ஓரமாக நின்று பார்த்து கொண்டு இருந்தேன். மேடையில் வ...

இந்தியா வந்த தோமா

இந்தியா வந்த தோமா தோமா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முக்கியமானவர். அவருக்கு சந்தேக தோமா என்னும் பெயரும் உண்டு. காரணம், இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சியளித்ததை தோமா நம்பவில்லை. தோமாவைத் தவிர மற்று அனைவரும் அறையில் கூடியிருக்கையில் இயேசு அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு தன்னுடைய உயிர்ப்பை உறுதிப்படுத்தினார். இதை தோமா நம்பவில்லை. தான் இயேசுவை நேரில் கண்டால் கூட நம்பமாட்டேன், அவருடைய கைகளில் உண்டான ஆணிக்காயங்களில் என்னுடைய விரலை விடவேண்டும், அவருடைய விலாவில் ஏற்பட்ட ஈட்டிக் காயத்தில் என்னுடைய கைகளை விடவேண்டும் பின்பே நம்புவேன் என்று கூறினார். இயேசுவைப் போல வேடமிட்டு ஒருவர் வந்தால் கூட கைகளில் துளையும், விலாவில் ஆழமான காயமும் இருக்க முடியாது என்பது அவருடைய நம்பிக்கை. தோமா சந்தேகத்தை வெளியிட்ட எட்டாவது நாள் மீண்டும் அவர்களுக்கு முன்பாக இயேசு தோன்றினார். அங்கே தோமாவும் இருந்தார். இயேசு தோமாவைப் பார்த்து, வா.. வந்து உன் விரல்களை என் கைகளின் காயத்திலும், கைகளை என் விலா காயத்திலும் இட்டு உன்னுடைய நம்பிக்கையின்மையை போக்கிக் கொள் என்றார். தன் கைகளை தோமாவின் முன்னால் நீட்டி...

தேவன் தரும் உடல் பாகத்திற்கான ஆசிர்வாதம்

1. *தலை:* கர்த்தர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார் ஸ்தோத்திரம்(சங்23:5) 2. *முகம்:* கர்த்தர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்கச் செய்கிறார் ஸ்தோத்திரம்.(எண்6:25) 3. *நெற்றி:* கர்த்தர் என் நெற்றியில் அவருடைய நாமத்தை தரிப்பித்திருக்கிறார் ஸ்தோத்திரம்.(உபா28:10) 4. *கண்:* கர்த்தர் என் கண்களைக் கண்ணீருக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்(சங்116:8) 5. *செவி:* கர்த்தர் நான் கேட்கும்படி என் செவிகளைக் கவனிக்கச் செய்கிறார். ஸ்தோத்திரம்.(ஏசா50:4) 6. *வாய்:* கர்த்தர் என் வாயை நன்மையால் திருப்தியாக்குகிறார் ஸ்தோத்திரம் (சங் 103:5) 7. *உதடுகள்:* கர்த்தர் என் உதடுகளைப் பரிசுத்தப்படுத்துகிறார். ஸ்தோத்திரம்(ஏசா6:7) 8. *நாவு:* கர்த்தர் எனக்கு கல்விமானின் நாவைத் தருகிறார்.ஸ்தோத்திரம். (ஏசா50:4) 9. *கழுத்து*: கர்த்தர் கழுத்திலிருந்து என் நுகத்தை நீக்குகிறார். ஸ்தோத்திரம்(ஏசா10:27) 10. *தோள்:* கர்த்தர் என் தோள்களை சுமைக்கு விலக்குகிறார் ஸ்தோத்திரம்(ஏசா10:27) 11. *கை:* கர்த்தர் என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கிறார் ஸ்தோத்திரம்.(சங்128:2) 1...

அன்றன்றுள்ள அப்பம் மரண பயமில்லை!

அன்றன்றுள்ள அப்பம் மரண பயமில்லை! "இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" (யோவா. 14:30). விதைக்கிறவன், விதைக்கிற விதையை வீணாக்கும்படி, ஆகாயத்துப் பறவைகள் போல பிசாசு வந்து, வசன விதைகள் உள்ளத்தில் முளைத்தெழும்பாதபடி அவை களை பொறுக்கியெடுத்துக் கொண்டு போகிறான். மரண நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரியைப்போல உலகத்தின் அதிபதியான பிசாசானவன் வந்து உங்களை சோதிக்கக்கூடும். ஒரு தேசம் விட்டு இன்னொரு தேசம் போகும்போது, அங்குள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகள், உங்களுடைய பெட்டியை சோதித்து அறிகிறார்கள்.  அதுபோல சாதத்தானும் உங்கள் பெட்டியாகிய வாழ்க்கையில், உலக நேசம் இருக்கிறதா? உலக ஞானம் இருக்கிறதா? உலக ஐக்கியம் இருக்கிறதா? உலகத் தின் ஆசாபாசங்களோடு உறவு உண்டா? என்பதையெல்லாம் சோதிப்பான். இயேசு கிறிஸ்து தைரியமாய் சொன்னார், "உலகத்தின் அதிபதிக்கு, என்னிடத்தில் ஒன்று மில்லை. என்னுடைய வாழ்க்கை திறந்த நிருபமாயிருக்கிறது." அவர் குற்றம் அறியாதவர். பாவம் செய்யாதவர். என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும் என்று சவாலாக கேட்டார். உ...

இயேசு ஒருவரால் மட்டுமே முடியும்.. தற்கொலை ஒரு தீர்வு அல்ல

தள்ளப்பட்டவனை தலைவனாக்கவும்.. ஒதுக்கப்பட்டவனை ஒப்பற்றவனாகவும்.. உடைக்கப்பட்டவனை உருவாக்கவும்.. நெருக்கப்பட்டவனை பெருக்கமாகவும்.. சின்னவனை ஆயிரமாகவும்.. சிறியவனை பலத்த ஜாதியாகவும்.. எளியவனை உயர்த்தவும்.. இயேசு ஒருவரால் மட்டுமே முடியும்..    தற்கொலை ஒரு தீர்வு அல்ல ரெபெக்காள் : "என் உயிர் இருந்து ஆவதென்ன?" (ஆதி 27 :46 ) மோசே: "இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்" (எண் 11 :15 ) எலியா: "போதும் கர்த்தாவே , என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் (1  இராஜா 19:4) யோபு: "நான் கர்ப்பத்தில் தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படும்போதே சாகாமலும் போனதென்ன?  (யோபு  3 :11 ) யோனா: இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். யோனா 4:3,8. தற்கொலை ஒரு தீர்வு அல்ல நம்முடைய வாழ்க்கையில் வருகிற சோதனைகளை துன்பங்களை பார்த்து, என்ன வாழ்க்கை இது,  சாவதே மேல் என்று நினைப்பது உண்டு . பல நேரங்களில் வாழ்வதைக்காட்டிலும் இறந்துபோனால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணம் நம்மில் பலர...

மறுரூபமாக்கிடும் மகிமையின் தேவனே

மறுரூபமாக்கிடும் மகிமையின் தேவனே நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். - (2கொரிந்தியர் 3:18). ஒருவண்ணத்துப்பூச்சியை பார்க்கும்போது, அதுதான் எத்தனை அழகு! எத்தனை வண்ணங்கள்! அது வண்ணமயமான தன் சிறு சிறகுகளை அடித்துப் பறக்கும்போது அதன் அழகில் மயங்காதவர்கள் யார் இருக்க முடியும்? அந்த அழகிய வண்ணத்துப்பூச்சியை கர்த்தரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஆச்சரியமு ம், அழகுமாயிருக்கும்! ஒரு வளர்ந்த வண்ணத்துப்பூச்சி அதற்கு விருப்பமான இலையில் முட்டைகளையிடுகிறது. அந்த முட்டைகளைச் சுற்றிலும் பசை போன்ற ஒரு திரவத்தினால் அதை இலையுடன் ஒட்ட வைத்து விடுகிறது. நாமும் நம் பாவங்களை நமக்கு மன்னித்து, அவருடைய இரத்தத்தினால் நம்மை கழுவி, நம்மை ஏற்றுக் கொண்ட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியம் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, முட்டை பொரிப்பதற்காக காத்திருக்க வேண்டும். காத்திருப்பது என்பது நாம் ஒவ்வொருவரும் அனுபவித்த காரியமாக இருக்க ...