*ஆராதனை →*
சில மாதங்களுக்கு முன்பு எனது வேலையின் நிமித்தம் ஞாயிறு அன்று வேறு ஒரு சபைக்கு சென்றேன். ஆராதனையை பாஸ்டர் அம்மா நடத்தினார்கள். அவர்கள் கூறினார்கள் பாடலாம் ஆடலாம். பாடல் பாடபட்டது, (ஆடும்படியான பாடல்) எல்லோரும் ஆட ஆரம்பித்தது விட்டார்கள். சகோதரிகள் பக்கம் பார்த்தேன் அவர்களும் ஆட ஆரம்பித்தது விட்டார்கள். ஒரு குண்டு சகோதரி தனது கனமான உடலை வைத்து ஆட முடியாமல் ஆடி கொண்டு இருந்தார்கள். ஏண்டா இந்த சபைக்கு வந்தோம் என்று நினைத்தேன்.
காலத்தின் கடைசி நாட்களில் இவ்விதமாய் குதித்து ஆடிப்பாடி ஆராதிக்கும் விசுவாசிகளின் எண்ணிக்கைக்கு பஞ்சம் கிடையாது. ஆராதனை இன்றைய நாட்களில் சபைகளில் திசை கெட்டு போய் கொண்டு இருக்கிறது. அவர்கள் இடம் கேட்டால் தாவீது ராஜா நடனம் பண்ணினார். ஆகையால் நாங்களும் நடனம் பண்ணுகின்றோம் என்று கூறுகின்றனர். நீங்கள் நடனம் பண்ண விரும்பினால் ஒர் அறைக்குள் பிரவேசித்து கதவை பூட்டி பாட்டு பாடி நடனம் ஆடுங்கள்.
சில வருடங்களுக்கு முன்பு கோவையில் திறந்த வெளி மைதானத்தில் நற்செய்தி கூட்டம் ஒன்று நடைபெற்றது. அடியேன் ஒரு ஓரமாக நின்று பார்த்து கொண்டு இருந்தேன். மேடையில் வாலிப பிள்ளைகள் பாட்டுக்கு தக்க நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு அருகில் இருந்த 2 புறஜாதியர் (இந்துக்கள்) கிறிஸ்தவர்களும் சினிமாகாரர்களை போல Disco dance ஆட ஆரம்பித்து விட்டார்கள் என்று சொல்லி சிரித்தார்கள். தேவ நாமம் புற ஜாதிகள் மத்தியில் தூஷிக்கபட்டது. சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. 1 கொரிந்தியர் 14:40
எங்கே அந்தவிதமான நடனம் இருக்கின்றதோ அங்கே தேவன் விரும்பும் பரிசுத்த நிலை இருக்காது. எங்கே ஒரு பரிசுத்தமான வாழ்க்கை உண்டோ அங்கு அந்த நடனம் இருக்காது.
இன்றைக்கு அநேக ஊழியர்கள் இந்த ஆட்டம், பாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ நோட்டீஸ் கிடைத்தது. அதன் தலைப்பு "ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்". பரிசுத்த பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் தனது பரிசுத்த வாழ்வை தாவீதை போன்ற நடனங்கள் மூலம் உலகுக்கு காண்பிக்க வில்லை. நடனம் பண்ணுவதையும், ஆவியில் நிரம்பி அங்கும் இங்கும் துள்ளி குதித்து கன்று குட்டி போல சாடுவதையும் அவர் விரும்பவில்லை. நாகர்கோவில் பட்டணத்தின் தெரு வழியாக சாது சுந்தர்சிங் நடந்து சென்று கொண்டு இருந்த போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு அம்மாள் தனது வீட்டிலிருந்து அவரை கண் ஏறிட்டுப் பார்த்த போது அவர்கள் தனது பைத்தியம் முற்றிலுமாக நீங்கி சுகம் பெற்றார்கள். ஆ எவ்வளவு மேன்மையான பரிசுத்த ஜிவியம்.
ஊழியர்கள் தேவையற்ற வெளியரங்கமான நாட்டிய நடனங்கள் மற்றும் உணர்ச்சி வசப்பட்ட ஆட்டங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பரிசுத்தம் ஒன்றிற்கு மாத்திரம் பிரதான இடத்தை கொடுப்போமாக
அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக் கொள்ளக்கடவோம். எபிரேயர் 12 :28
பரிசுத்தவான்கள் சீர் பொருந்தும் (பரிசுத்தமாகும்) இடம் சபை. Dance ஆடும் இடம் அல்ல.
கடைசி நாட்களில் மனுஷர் தற்பிரியராக காணப்படுவார்கள் (1 தீமோ 3:1-4) என்பது எவ்வளவு உண்மை.
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ *விட்டு விலகு.*
2 தீமோத்தேயு 3:5
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
1 கொரிந்தியர் 10. *Dance பக்திவிருத்தியை உண்டாக்குமா ?*
தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்தை வீட்டு விலகுவார்கள்
2 தீமோ 4:3-4
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். சங்கீதம் 2 :11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங் கொண்டிருக்கிறது.
பிரசங்கி 8:11
ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? 2 கொரி 11:29
Comments
Post a Comment