ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்
“ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (மத்தேயு 10:31)
மனிதர்களிடம் பயம் என்பது பொதுவாக காணப்படுகிறது. ஒவ்வொரு நபரும் ஒருவகையான பயத்தில் சிக்கி கொண்டுள்ளனர். முக்கியமாக, நம் அனைவருக்கும் எதிர்காலத்தை குறித்தான பயம் அதிகம் உண்டு. நம் குடும்பம், வேலை, சமூதாயம் என்று நினைக்கும் போது, அது நமக்குள் பயத்தையும் பதட்டத்தையும் உருவாக்குகிறது. ஆனால், ‘பயப்படாதிருங்கள்’ என்று இயேசு கூறுகிறார். ஏனெனில், நம்மை அழைத்த பிதா ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை! மேலும், நாம் சுவிசேஷத்தினிமித்தம் பயப்படக்கூடாது. கிறிஸ்தவ சரித்திரத்தில், அநேக விசுவாசிகள் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பதை காண முடிகிறது. ஆனால், சரீரத்தை மட்டும் கொல்லுகிறவர்களுக்கு பயப்பட வேண்டாம் என்று இயேசு கூறுகிறார். ஏனெனில், நம் மாம்ச சரீரம் அழிந்தாலும், நாம் உண்மையுள்ளவர்களாய் இருந்தால், மகிமையின் சரீரத்தில் பிதா நம்மை உயிர்த்தெழச் செய்வார் அல்லவா. எனவே, நம் எதிர்காலத்தை குறித்தும், சுவிசேஷத்தினிமித்தமும் நாம் பயப்பட வேண்டும். மெய்யாகவே, கடவுளின் பார்வையில் நாம் விசேஷித்தவர்கள்!
Comments
Post a Comment