Recent

Breaking News

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்!





அன்றன்றுள்ள அப்பம்

தாமதிக்காதிருங்கள்!

"Time and tide wait for no man" "அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத் தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்" (ஆதி. 19:16).

 "நாட்களை எண்ணும் அறிவு" உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் காலங்களை வீணாக்கமாட்டீர்கள். தாமதித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள். செய்ய விரும்பிய காரியங்களை, குறிப்பிட்ட நேரத்திலே துரிதமாக செய்து முடிப்பீர்கள். சோதோம் கொமோரா பட்டணம், அழிவுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது, என்று அறியாத லோத்தின் குடும்பத்தினர் தாமதித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த தேவதூதன், அவர்களது கையை பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து, விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

 சோதோம் கொமோராவின் பாவம், வானபரியந்தம் எட்டியது. அதனுடைய கூக்குரல் பெரிதாயிருந்தது. ஆகவே, கர்த்தர் அந்தப் பட்டணத்தை முற்றிலுமாக அழிக்கும்படி சித்தங்கொண்டார். அவ்வளவு பெரிய பட்டணத்தில், ஒரே ஒரு நீதிமான் மட்டுமே இருந்தார். அவனுடைய பெயர் லோத்து. கர்த்தர் அக்கிரமக்கார ரோடே நீதிமானாகிய லோத்தை அழிக்க விரும்பாமல், அவனையும், அவனுடைய குடும்பத்தையும், தப்புவிக்க சித்தங்கொண்டார். கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதர் லோத்தை நோக்கி, "பட்டணத்திற்கு வரும் தண்டனையில், நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக் கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்" (ஆதி. 19:15).

 தேவபிள்ளைகளே, உலகத்தின் முடிவைக் குறித்து ஆவியானவர் அறிந்திருக்கிற படியினால், அவர் உங்களை துரிதப்படுத்துகிறார். நாம் வாழுகிற இந்த உலகம், வெடித்து சிதற ஆயத்தமாயிருக்கிறது. நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்கிவிட்டது. "என் ரூபவதியே, எழுந்து வா" என்று கர்த்தர் அழைக்கிறார். ஒரு மலைச் சரிவிலுள்ள, ஒரு கருங்கல் பாறைக்கு சில தொழிலாளிகள், வெடி வைத்து தகர்க்க, வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு தாயும், பிள்ளையும், திடீரென்று அங்கே அந்த பாதை வழியாக வந்து விட்டார்கள். தாய்க்கு வரப்போகிற ஆபத்து தெரியாது. ஆனால் தொழிலாளிகளுக்குத் தெரியும். ஆகவே அவர்கள் சத்தமிட்டு அலறி, "குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடு" என்று சொன்னார்கள். உடனே ஆபத்தை உணர்ந்த தாய், பிள்ளையை தூக்கிக் கொண்டு ஓடவும், பாறை வெடித்து சிதறவும் சரியாயிருந்தது. தாமதித்திருந்திருப் பார்களானால், மரணம் ஏற்பட்டிருக்கும். தேவபிள்ளைகளே, ஞானஸ்நானம் பெற தாமதியாதிருங்கள். கர்த்தரோடும், மனுஷரோடும் ஒப்புரவாக தாமதியாதிருங்கள். யார் யாரிடத்தில் கசப்பு இருக்கிறதோ, வைராக்கியமிருக்கிறதோ, அதையெல்லாம் சீர்ப்படுத்தி, முன்னேற தாமதியாதிருங்கள். என்பது பழமொழி. "ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருப்பதில்லை" கர்த்தர் ஒன்றுக்கும் முந்தவுமாட்டார், பிந்தவுமாட்டார். அவர் ஒவ்வொன்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர். ஆகவே, தாமதியாதேயுங்கள்.

நினைவிற்கு:- "உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்" (லூக். 19:42).

No comments