Skip to main content

மறுரூபமாக்கிடும் மகிமையின் தேவனே

மறுரூபமாக்கிடும் மகிமையின் தேவனே



நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். - (2கொரிந்தியர் 3:18).

ஒருவண்ணத்துப்பூச்சியை பார்க்கும்போது, அதுதான் எத்தனை அழகு! எத்தனை வண்ணங்கள்! அது வண்ணமயமான தன் சிறு சிறகுகளை அடித்துப் பறக்கும்போது அதன் அழகில் மயங்காதவர்கள் யார் இருக்க முடியும்? அந்த அழகிய வண்ணத்துப்பூச்சியை கர்த்தரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஆச்சரியமு
ம், அழகுமாயிருக்கும்!


ஒரு வளர்ந்த வண்ணத்துப்பூச்சி அதற்கு விருப்பமான இலையில் முட்டைகளையிடுகிறது. அந்த முட்டைகளைச் சுற்றிலும் பசை போன்ற ஒரு திரவத்தினால் அதை இலையுடன் ஒட்ட வைத்து விடுகிறது. நாமும் நம் பாவங்களை நமக்கு மன்னித்து, அவருடைய இரத்தத்தினால் நம்மை கழுவி, நம்மை ஏற்றுக் கொண்ட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியம் வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுத்து, முட்டை பொரிப்பதற்காக காத்திருக்க வேண்டும். காத்திருப்பது என்பது நாம் ஒவ்வொருவரும் அனுபவித்த காரியமாக இருக்க வேண்டும். கர்த்தருடைய வேளை வரும் வரையில் நாம் எல்லாவற்றிலும் எந்த காரியத்திலும் காத்திருக்க வேண்டும்.


பின் குறித்த காலத்தில் முட்டை பொரிந்து, புழு வெளிவரும். அதன் முக்கிய வேலை சாப்பிட்டுக் கொண்டே இருப்பதுதான். உணவாக சாப்பிடுவதற்கு இலையை தேடிக் கொண்டு, அதை சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். ஆம், கர்த்தருக்குள் இப்போது அவருடைய வார்த்தைகளை உட்கொண்டு, அவற்றை வாசித்து, தியானித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


அப்படி புழுவானது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்போது, அழகிய மாற்றம் உண்டாகிறது. முன்னிருந்த உருவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அழகிய வண்ணத்துப்பூச்சியாக உருமாறி விடுகிறது. அதைப்போலவே கர்த்தருடைய வார்த்தையை வாசித்து, வாசித்து, தியானித்துக் கொண்டே இருக்கும்போது, பாவ சரீரமும், பாவ சிந்தனைகளும் மாறி, நம்முடைய மனம் புதிதாகி, அற்புதமான கர்த்தர் விரும்புகிற மாற்றம் நம்மில் நிகழுகிறது.


கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்படும் ஊழியர்களை நாம் கேட்போமானால், அவர்கள் ஊழியத்திற்கு வருவதற்குமுன்பாக கர்த்தருடைய வார்த்தையை வருடக்கணக்கில் நன்கு படித்து, தியானித்து,கர்த்தருக்குள் பலன் கொண்டபிறகுதான் ஊழியத்திற்கு வந்நதாக கூறுவார்கள். அவர்கள் உட்கொண்ட வசனத்தின் மூலம் கர்த்தர் தங்களுக்கு கொடுத்த வெளிப்பாட்டையே அவர்கள் போதிக்கிறார்கள். வசனம் தெரியாமல் ஒருவரும் ஊழியராக முடியாது.


பிரியமானவர்களே, ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாற வேண்டுமென்றால் இத்தனை மாற்றங்கள் அவசியமாக இருக்கும்போது, தேவசாயலாக படைக்கப்பட்ட நாம் மறுரூபமடைய நம்மில் எத்தனை மாற்றங்கள் தேவை என்பதை சிந்தித்துப் பார்ப்போம். நாம் அவருடைய வார்த்தையினால் புடமிடப்பட்டு, பழைய சுபாவங்கள், பழைய குணாதிசயங்கள் மாற்றப்படும்போது, நொடிப்பொழுதில் மறுரூபமடைந்து கர்த்தருடைய வருகையில் காணப்படுவோம்.


அடுத்த முறை வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கும்போது, தேவன் நம்மில் அதுப்போல படிப்படியாக மாற்றத்தை கொண்டு வந்து, அவருடைய வருகையில் நாம் காணப்பட கிருபை செய்யும்படியாக ஜெபிப்போம். 'நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்'. ஆமென் அல்லேலூயா

Comments

Popular posts from this blog

இந்தியா வந்த தோமா

இந்தியா வந்த தோமா தோமா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முக்கியமானவர். அவருக்கு சந்தேக தோமா என்னும் பெயரும் உண்டு. காரணம், இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சியளித்ததை தோமா நம்பவில்லை. தோமாவைத் தவிர மற்று அனைவரும் அறையில் கூடியிருக்கையில் இயேசு அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு தன்னுடைய உயிர்ப்பை உறுதிப்படுத்தினார். இதை தோமா நம்பவில்லை. தான் இயேசுவை நேரில் கண்டால் கூட நம்பமாட்டேன், அவருடைய கைகளில் உண்டான ஆணிக்காயங்களில் என்னுடைய விரலை விடவேண்டும், அவருடைய விலாவில் ஏற்பட்ட ஈட்டிக் காயத்தில் என்னுடைய கைகளை விடவேண்டும் பின்பே நம்புவேன் என்று கூறினார். இயேசுவைப் போல வேடமிட்டு ஒருவர் வந்தால் கூட கைகளில் துளையும், விலாவில் ஆழமான காயமும் இருக்க முடியாது என்பது அவருடைய நம்பிக்கை. தோமா சந்தேகத்தை வெளியிட்ட எட்டாவது நாள் மீண்டும் அவர்களுக்கு முன்பாக இயேசு தோன்றினார். அங்கே தோமாவும் இருந்தார். இயேசு தோமாவைப் பார்த்து, வா.. வந்து உன் விரல்களை என் கைகளின் காயத்திலும், கைகளை என் விலா காயத்திலும் இட்டு உன்னுடைய நம்பிக்கையின்மையை போக்கிக் கொள் என்றார். தன் கைகளை தோமாவின் முன்னால் நீட்டி...

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்!

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்! "Time and tide wait for no man" "அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத் தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்" (ஆதி. 19:16).  "நாட்களை எண்ணும் அறிவு" உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் காலங்களை வீணாக்கமாட்டீர்கள். தாமதித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள். செய்ய விரும்பிய காரியங்களை, குறிப்பிட்ட நேரத்திலே துரிதமாக செய்து முடிப்பீர்கள். சோதோம் கொமோரா பட்டணம், அழிவுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது, என்று அறியாத லோத்தின் குடும்பத்தினர் தாமதித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த தேவதூதன், அவர்களது கையை பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து, விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  சோதோம் கொமோராவின் பாவம், வானபரியந்தம் எட்டியது. அதனுடைய கூக்குரல் பெரிதாயிருந்தது. ஆகவே, கர்த்தர் அந்தப் பட்டணத்தை முற்றிலுமாக அ...

ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*.

*ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*. உற்சாகமில்லாமலிருந்தாலும் ஜெபி ஊக்கமில்லாவிட்டாலும் ஜெபி. பதில் வந்தாலும் ஜெபி பதில் வராவிட்டாலும் ஜெபி. நல்லாருந்தாலும் ஜெபி நல்லாயில்லாவிட்டாலும் ஜெபி. குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி ஜெபித்துக் கொண்டேயிரு. ஏனென்றால் ஜெபம்தான் உன் வாழ்க்கையை மாற்றும் உன்னத வழி. ஜெபம்தான் தேவனோடு பேச ஒரே வழி. ஜெபிக்க பழகாதவரை நீ ஒரு சாதாரண கிறிஸ்தவன். *ஜெபிக்க பழகிவிட்டால் நீ ஒரு சாதனை கிறிஸ்தவன்.*