Skip to main content

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்




​​​இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்

இந்த பாடல் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இப்பாடல் ஒரு இரத்தசாட்சி தன் மரண தருவாயில் இயற்றிய பாடல் ஆகும். எத்தகைய பாடுகளும் கிறிஸ்துவின் அன்பை விட்டு தன்னை பிரிக்க முடியாது என்ற தைரியத்துடன் விசுவாசத்துக்காக வாழ்ந்து மரித்த ஒருவரின் கதை இது. சுமார் 150 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து ஜெர்மனி போன்ற தேசங்களிலிருந்து இந்தியாவிற்கு நற்செய்திப் பணிக்காக பலர் வந்தனர். அவர்களில் வெல்ஷ் தேச மிஷனெரி ஒருவர் வடகிழக்கு இந்தியாவில் ஒரு கிராமத்தில் இரு பிள்ளைகளடங்கிய ஒரு சிறிய குடும்பத்தை ஆண்டவருகாக ஆதாயப்படுத்தினார். கிறிஸ்தவராக மாறிய அந்த மனிதனின் விசுவாசம் அந்த கிராமத்திலுள்ள மற்றவர்களையுயும் அசைத்தது. இதனால் கோபமடைந்த அந்த கிராமத்தலைவர் எந்த கிராமத்திலுள்ளவர்கள் எல்லாரையும், அந்தக் கிறிஸ்தக் குடும்பத்தையும் கூட்டி * நீங்கள் எல்லாருக்கும் முன்பாக உங்கள் விசுவாசத்தை விட்டு விலகுங்கள்- இல்லையெனில் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் * என் எச்சரித்தான். அச்சமயத்தில் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு அந்த மனிதன் ஒரு பாடலை பாடினார்,

இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன் I have decided to follow Jesus பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் No turning back No turning back இதனால் கடுங்கோபமுற்ற அந்தக் கிராமத்தலைவன் அந்தக் கிறிஸ்தவனின் இரு பையன்களையும் கொல்லுமாறு தன் வில்வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அந்த இரு சிறுவர்களும் வில் அம்பினால் குத்தப்பட்டு கீழே விழுந்து கிடக்கையில்,அந்த கிராமத்தலைவன் அக்கிறிஸ்தவனை நோக்கி,* இப்போதாவது நீ உன் விசுவாசத்தை விட்டு விட மாட்டாயா? பார் உன் இரு பையன்களும் நீ இழந்து விட்டாய். நீ உன் விசுவாசத்தை விட்டு விலகா விட்டால் நீ உன் மனைவியையும் இழந்து விடுவாய்* என கர்ஜித்தான்.அப்போது அந்த மனிதன்,

யாரில்லயெனினும் பின் தொடர்வேனே * Though no one joins me still i will follow பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் * No turning back No turning back என்று பாடினார். கடுங்கோபமுற்ற கிராமத்தலைவன் அவனுடைய மனைவியையும் கொல்ல உத்தரவிட்டான். ஒரு சில நிமிடங்களில் அவனுடைய மனைவியும் தன் இரு பிள்ளைகளைச் சாவில் சந்தித்தாள். கடைசியாக அந்த கிராமத்தலைவன், * நீ உயிர் பிழைப்பதற்கு ஒரு கடைசி தருணம் தருகிறேன், இப்போது இந்த உலகத்தில் உனக்கென்று யாருமே இல்லை. என்ன சொல்கிறாய்?* என்று வினவினான். அந்த கிறிஸ்தவ மனிதன் காலத்தால் அழியாத கடைசி கவியைப் பாடினான்:

சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே * The Cross before me The World behind me பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் * No turning back No turning back இந்த மனிதனுடைய மரணத்தோடு கிறிஸ்தவம், நம் கிராமத்தில் ஒழிந்து விடும் என்று அக்கிராமத்திலுள்ள எல்லாரும் நினைத்தனர். ஆனால் அந்த மனிதனின் மரணம் ஒரு துவக்கமே. பரிசுத்த ஆவியானவர் அங்குள்ளவர்களின் மனதில் கிரியை செய்தார். இந்த மனிதன்,அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் 2000வருடங்களுக்கு முன் வேறொரு தேசத்தில் வாழ்ந்து மரித்த ஒரு மனிதனுக்காக ஏன் மரிக்கவேண்டும்?* என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்ட அந்தக் கிராமத்தலைவன், * அந்தக் குடும்பத்தினரிடம் ஏதோ ஒரு இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத சக்தி இருந்திருக்க வேண்டும். நானும் அந்த அற்புதத்தை பெற விரும்புகிறேன்* என்று தன் மனதில் நினைத்தான்.

உடனடியாக தன் விசுவாசத்தை அறிக்கையிட்ட அந்த கிராமத்தலைவன், * நானும் கிறிஸ்துவைச் சேர்ந்தவன் தான்* என்று கூறினான். தங்கள் தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட அந்த கிராமத்தவர்கள் அனைவரும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்

Comments

Popular posts from this blog

A new Beginning

A NEW BEGINNING 1. Be with people (Mark 1:1-8) God’s ultimate plan to save the world was about to be fulfilled through his own son, Jesus Christ. John the Baptist was supposed to prepare the way. John the Baptist was there with the people. The whole Judean countryside and all the people of Jerusalem went to meet John the Baptist. They were open about their life, and even ready to be baptized by him. Though John was dressed in an unusual manner, the people came to him. John was with the people. People need help. They want to talk about their life, hurt, ill-feelings, struggles to forgive, and most of all forgiveness of sin from God. As a disciple, we should imitate John, i.e. being with people. A disciple’s lifestyle should be surrounded by people. 2. Be in step with the Spirit (Mark 1:9-13) After Jesus was baptized, he received the spirit, which descended on him like a dove. God was excited about his son, as we see he openly declared his love for him. The scripture say

How to Prayer To ?-The Living God who listen your All Request from your heart.

Heavenly Father, in the Name of Jesus Christ our High Priest, I come before Your throne today, and I speak this blessing: May the Lord bless you and keep you; and may the Lord make His face to shine upon you; may the Lord be gracious unto you and lift up His countenance upon you; and may the Lord give you His peace. Lord God, I ask You in the Name above every name that You open the windows of heaven and pour out divine provision upon every one of Your children. I speak and release health and healing to every physical body. I come against every form of infirmity; I come against every form of sickness and disease; I come against every physical malady in the name of Jesus Christ, and I declare that these sicknesses and diseases are cursed at the root and that the blessing of divine health freely flows into their lives like streams of living water. Lord, I speak peace to every life that is in torment, for Your name is Jehovah Shalom, the Lord our Peace. I give You praise, Father, that the

கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன்?*

*தலித் இந்துக்களே கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன்?* ஒருமுறை ஒரு இந்து சகோதரன், "சார், இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்வதால் அவரை நாங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறீர்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம். தாராளமாக உங்கள் கடவுளையும் எங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அதேபோல, மேல்மருவத்தூரில் இருக்கும் ஆதிபராசக்தியும் அற்புதம் செய்வதால் எங்கள் கடவுளையும் உங்கள் கடவுளாக வணங்கமுடியுமா சார்? நாலுமாவடிக்கு மக்கள் கூட்டமாக விடுதலையை தேடி வருவதுபோல எங்கள் கோயில்களுக்கும் கூட்டமாக மக்கள் விடுதலையைத்தேடி வருகிறார்களே சார்" என்று சாந்தமாக கேட்டார். இந்த கேள்வி என்னை மிகவும் சிந்திக்கவைத்தது. வெறுமனே அற்புதங்களை செய்துகாட்டி மதமாற்றம் செய்ய மட்டும்தான் இயேசு வந்தாரா? அப்படியானால் அற்புதங்கள் செய்யும் வலிமை உடைய எதையும் கடவுள் என்று ஏற்றுக்கொள்ளலாமா? "இறைவன் ஒருவனே" என்ற கொள்கையை கிறிஸ்தவர்களாகிய நாம் கற்றிருக்கிறோமே! கடவுள் அல்லாத சக்திகளாலும் அற்புதங்களை செய்யமுடியுமானால் உண்மையான கடவுளை அடையாளம் காண்பது எப்படி? என்றெல்லாம் அன்றே நான் தேட ஆரம்பித்துவிட்டேன். மறை