Skip to main content

Posts

ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*.

*ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*. உற்சாகமில்லாமலிருந்தாலும் ஜெபி ஊக்கமில்லாவிட்டாலும் ஜெபி. பதில் வந்தாலும் ஜெபி பதில் வராவிட்டாலும் ஜெபி. நல்லாருந்தாலும் ஜெபி நல்லாயில்லாவிட்டாலும் ஜெபி. குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி ஜெபித்துக் கொண்டேயிரு. ஏனென்றால் ஜெபம்தான் உன் வாழ்க்கையை மாற்றும் உன்னத வழி. ஜெபம்தான் தேவனோடு பேச ஒரே வழி. ஜெபிக்க பழகாதவரை நீ ஒரு சாதாரண கிறிஸ்தவன். *ஜெபிக்க பழகிவிட்டால் நீ ஒரு சாதனை கிறிஸ்தவன்.*

கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன்?*

*தலித் இந்துக்களே கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன்?* ஒருமுறை ஒரு இந்து சகோதரன், "சார், இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்வதால் அவரை நாங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறீர்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம். தாராளமாக உங்கள் கடவுளையும் எங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அதேபோல, மேல்மருவத்தூரில் இருக்கும் ஆதிபராசக்தியும் அற்புதம் செய்வதால் எங்கள் கடவுளையும் உங்கள் கடவுளாக வணங்கமுடியுமா சார்? நாலுமாவடிக்கு மக்கள் கூட்டமாக விடுதலையை தேடி வருவதுபோல எங்கள் கோயில்களுக்கும் கூட்டமாக மக்கள் விடுதலையைத்தேடி வருகிறார்களே சார்" என்று சாந்தமாக கேட்டார். இந்த கேள்வி என்னை மிகவும் சிந்திக்கவைத்தது. வெறுமனே அற்புதங்களை செய்துகாட்டி மதமாற்றம் செய்ய மட்டும்தான் இயேசு வந்தாரா? அப்படியானால் அற்புதங்கள் செய்யும் வலிமை உடைய எதையும் கடவுள் என்று ஏற்றுக்கொள்ளலாமா? "இறைவன் ஒருவனே" என்ற கொள்கையை கிறிஸ்தவர்களாகிய நாம் கற்றிருக்கிறோமே! கடவுள் அல்லாத சக்திகளாலும் அற்புதங்களை செய்யமுடியுமானால் உண்மையான கடவுளை அடையாளம் காண்பது எப்படி? என்றெல்லாம் அன்றே நான் தேட ஆரம்பித்துவிட்டேன். மறை...

ஸ்காட்லாந்து தேசத்தை சேர்ந்த ஜாண் நாக்ஸ் என்ற பக்தன் முழங்காலிலே நின்று தன் தேசத்திற்காக மன்றாடி ஜெபிக்கிற ஜெப வீரன் !!!!

*ஜெப வீரன்* 💠   ஸ்காட்லாந்து தேசத்தை சேர்ந்த ஜாண்  நாக்ஸ்   என்ற பக்தன் முழங்காலிலே  நின்று தன் தேசத்திற்காக மன்றாடி ஜெபிக்கிற ஜெப வீரன் !!!! 💠   ஸ்காட்லாந்து தேசத்தை எனக்குத் தாரும்!!இல்லாவிட்டால் நான் மடிந்து போகட்டும் என கதறி ஜெபிக்கிற ஒரு ஜெப வீரன் அவர்! !! 💠  அந்த தேசத்தை அரசாண்ட பொல்லாத ராணியாகிய இரத்தவெறி பிடித்த அரசியாகிய மேரி சொன்னாள்!! " நான் உலகத்துக்கு எவருக்கு பயப்படாமல் இருந்தாலும், முழங்காலில் நிற்கிற ஜாண் நாக்ஸிற்க்கு பயப்படுகிறேன்!!! 💠   அவன் முழங்கால்படியிட்டால் போதும், என் உடல் தீ  பற்றி எரிகிற அளவுக்கு வேதனை உண்டாகிறது! !என்றாளாம்!!! 💠  முழங்கால் படியிட்டு ஜெபிக்கிற  தேவ பிள்ளைகளுக்கு அசாதாரண வல்லமை உண்டு!! 💠   முழங்கால் படியிட்டு தேவனை பார்க்கிறவன் எந்த மனிதனிடமும்  மண்டியிட அவசியம் வராது!!! 💠  ஜெபிக்கிறவனைக் கண்டால் சாத்தான் மட்டுமல்ல!! அரசாங்கமே நடுங்கி திகைக்கும் என்பதில் ஐயமில்லை!! 💠  ஜெபிக்கிற மோசேவைக் கண்டு பார்வோன் ராஜா நடுங்கினான்!!! 💠...

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது

நீ எத்தனை லட்சத்துக்கு  குடில் அமைத்தாலும், நீ எவ்வளவு உயரமான கிருஸ்துமஸ் மரம் வைத்தாலும், எத்தனை ஸ்டார் கட்டினாலும், வீடுமுழுவதும் சீரியல் பல்ப் போட்டாலும், எத்தனை கலரில் வீட்டுக்கு சுண்ணாம்பு அடித்தாலும், எத்தனை கோடி செலவுசெய்து அலங்கரித்தாலும், நீ மகிழலாம், உன் குழந்தைகள் மகிழலாம், உன் உறவினர்கள் மகிழலாம். ஆனால் இயேசு மகிழ்வாரா...!!! பொம்மையையும், வீட்டையும் நீ அழகுபடுத்துவதற்காக அவர் பிறக்கவில்லை உன்னை அலங்கரிப்பதற்காகவே பிறந்தார் உன் உள்ளத்தை பரிசுத்தம் என்கிற அலங்காரத்திலே அலங்கரிப்பாயானால் கண்டிப்பாக உன்னுடைய உள்ளத்திலே பிறப்பார். உன் அலங்காரத்தை அல்ல உன்னுடைய பரிசுத்தத்தையே தேவன் விரும்புகிறார்.  *அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது* 1 பேதுரு 3:4

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்!

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்! "Time and tide wait for no man" "அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத் தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்" (ஆதி. 19:16).  "நாட்களை எண்ணும் அறிவு" உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் காலங்களை வீணாக்கமாட்டீர்கள். தாமதித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள். செய்ய விரும்பிய காரியங்களை, குறிப்பிட்ட நேரத்திலே துரிதமாக செய்து முடிப்பீர்கள். சோதோம் கொமோரா பட்டணம், அழிவுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது, என்று அறியாத லோத்தின் குடும்பத்தினர் தாமதித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த தேவதூதன், அவர்களது கையை பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து, விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  சோதோம் கொமோராவின் பாவம், வானபரியந்தம் எட்டியது. அதனுடைய கூக்குரல் பெரிதாயிருந்தது. ஆகவே, கர்த்தர் அந்தப் பட்டணத்தை முற்றிலுமாக அ...

அன்றன்றுள்ள அப்பம் விசேஷ அறிவு!

அன்றன்றுள்ள அப்பம் விசேஷ அறிவு! "எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்" (சங். 90:12). இது ஒரு சிறு ஜெபம்தான். அபூர்வமான ஜெபம். சிந்திக்க வைக்கும் வித்தியாசமான ஜெபம். "பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்று ஆயக்காரன் ஜெபித்த ஜெபம், அவனையும் நீதிமானாக்கிற்று. என் எல்லைகளை விரிவாக்க வேண்டும் என்று யாபேஸ் செய்த சிறு ஜெபம், அவர் வேண்டிக்கொண்டதை கர்த்தரிடத்தில் பெற்றுத் தந்தது. வானத்திலிருந்து அக்கினி இறங்கும்படியாக எலியா ஜெபித்த சிறு ஜெபம், கர்மேல் பர்வதத்திலே மிகப் பெரிய எழுப்புதலை உண்டாக்கிற்று. கண்கள் பிடுங்கப்பட்ட நிலைமையிலே, சிம்சோன் ஜெபித்த ஜெபம், இழந்துபோன பெலனை திரும்பக் கொண்டு வந்தது. அதேநேரம், "எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தரு ளும்" என்று உள்ளமுருகி ஜெபித்தார் மோசே பக்தன். அவருடைய இந்த ஜெபம் 90-ம் சங்கீதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியானால், அந்த ஜெபம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்! அவர் ஒரு தேவ மனுஷன். வேதத்தில் ஏழுபேர் தேவனுடைய மனுஷர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 1. மோசே (...

ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்

“ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (மத்தேயு 10:31) மனிதர்களிடம் பயம் என்பது பொதுவாக காணப்படுகிறது. ஒவ்வொரு நபரும் ஒருவகையான பயத்தில் சிக்கி கொண்டுள்ளனர். முக்கியமாக, நம் அனைவருக்கும் எதிர்காலத்தை குறித்தான பயம் அதிகம் உண்டு. நம் குடும்பம், வேலை, சமூதாயம் என்று நினைக்கும் போது, அது நமக்குள் பயத்தையும் பதட்டத்தையும் உருவாக்குகிறது.  ஆனால், ‘பயப்படாதிருங்கள்’ என்று இயேசு கூறுகிறார். ஏனெனில், நம்மை அழைத்த பிதா ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை! மேலும், நாம் சுவிசேஷத்தினிமித்தம் பயப்படக்கூடாது. கிறிஸ்தவ சரித்திரத்தில், அநேக விசுவாசிகள் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பதை காண முடிகிறது. ஆனால், சரீரத்தை மட்டும் கொல்லுகிறவர்களுக்கு பயப்பட வேண்டாம் என்று இயேசு கூறுகிறார். ஏனெனில், நம் மாம்ச சரீரம் அழிந்தாலும், நாம் உண்மையுள்ளவர்களாய் இருந்தால், மகிமையின் சரீரத்தில் பிதா நம்மை உயிர்த்தெழச் செய்வார் அல்லவா. எனவே, நம் எதிர்காலத்தை குறித்தும், சுவிசேஷத்தினிமித்தமும் நாம் பயப்பட வேண்ட...