அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்! "Time and tide wait for no man" "அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத் தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்" (ஆதி. 19:16). "நாட்களை எண்ணும் அறிவு" உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் காலங்களை வீணாக்கமாட்டீர்கள். தாமதித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள். செய்ய விரும்பிய காரியங்களை, குறிப்பிட்ட நேரத்திலே துரிதமாக செய்து முடிப்பீர்கள். சோதோம் கொமோரா பட்டணம், அழிவுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது, என்று அறியாத லோத்தின் குடும்பத்தினர் தாமதித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த தேவதூதன், அவர்களது கையை பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து, விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சோதோம் கொமோராவின் பாவம், வானபரியந்தம் எட்டியது. அதனுடைய கூக்குரல் பெரிதாயிருந்தது. ஆகவே, கர்த்தர் அந்தப் பட்டணத்தை முற்றிலுமாக அ...
Comments
Post a Comment